பேராசான்

கல்லணையைக் கட்டி
நீர் மேலாண்மையை
உலகுக்குக் கற்றுத்தந்த நாம்
இயற்கையின் குரல்வளையை
சுயநலக் கரங்களால் நெரித்துவிட்டு
இன்று தாகத்தில் நாவறண்டு
தண்ணீர் தண்ணீரென்று
குடத்தை ஏந்திக்
குரல் கொடுக்கிறோம்
பேசயியலாத
அஃறிணை என்ன செய்யும்..

ஆற்றை
அணு அணுவாய்த் தோண்டி
நதியின் நடையை முடமாக்கி
நீர்த்தேக்கங்களை நிர்மூலமாக்கி
ஏரியில் வீட்டைக் கட்டிவிட்டு
லாரியில் வரும் தண்ணீருக்காக
வாடிக் காத்துக்கிடக்கிறோம்…

நம் சுயநலமே
நம் வாழ்வை
சூன்யமாக்கும்..

தோழா!
அனுபவமே பேராசான்…

@ தியாக இரமேஷ்

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*