வீணை…

யாழ் வழிவந்த வீணை
இது வழிவழியாய் வந்த
இந்திய இசைச்சிந்தனை
தம்புராவும் பிடிலும் இதன்
தொப்புள்கொடி…

சரஸ்வதிவீணை , மரகதவீணை
இரகுநாதவீணை ,உருத்திரவீணையென
பல பெயர் தாங்கினாலும்
எந்த இடத்தில் தங்கினாலும்
உடல் பலாமரம்
உயிர் தஞ்சைமண்…

வீணையின்
தந்தியை மெல்ல மீட்ட
பசிமறக்கச் செய்யும்
பால் அமுதம்
வேணுகானம் கலந்துவரும்
வீணை கானத்தில்
எவ்வுயிரும் மயங்கும்
எழுந்து செல்ல
எப்போதும் மனம் தயங்கும்…

”மாசில் வீணையும் மாலைமதியமும்”
அப்பர் அள்ளித்தெளித்த ஆன்மீகவரிகள்
”நல்லதோர் வீணை”
பாரதி பாதிறத்தின் வளமிகு சிந்தனை
”இதயவீணை தூங்கும்போது
பாடமுடியுமா”
கவியரசரின் தத்துவவரிகள்
இப்படி
வாழ்க்கை வழியெங்கும் வீணை..

வீணை!
பண்பாட்டு விழுமியங்களை
எட்டுதிக்கும் பரப்பிய சுனை
இந்திய இசைமரபை
பண்பட்ட கலாச்சாரத்தை
கட்டிக்காத்த சேனை…

வீணை!
இன்னமொரு
பெண்ணாள்…

@ தியாக இரமேஷ்

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*