நாட்டிய சாத்திரத்தில் இசை – சா.கோகுலவதனி

நாட்டிய சாத்திரத்தில் இசை, நாட்டியத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. பரதமுனிவரால் எழுதப்பட்ட நாட்டிய சாத்திரம், நாட்டியம், இசை நாடகம் ஆகியவற்றை  உள்ளடக்கியது. இசையானது நாட்டியத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் கதையாகச் சொல்லவும், பார்வையாளர்களை கவரவும் பயன்படுகின்றது.

நாட்டிய சாத்திரத்தில் இசையின் பங்கு உணர்வுகளை வெளிப்படுத்துதல் இசை, நாட்டியத்தில் வரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது. கதையைச் சொல்லுதல் நாட்டியத்தில் வரும் கதையை இசையின் மூலம் பார்வையாளர்களுக்கு புரிய வைக்கலாம். ரசனையை அதிகரித்தல் இசையானது நாட்டியத்தின் ரசனை மற்றும் அழகை அதிகரிக்கிறது.

கலைஞர்களுக்கு உதவுதல் இசையானது கலைஞர்களுக்கு நாட்டியத்தை சிறப்பாகச் செய்ய உதவுகிறத. இசைக்கருவிகள இசைக் கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு பெறச் செய்வதற்கும், நடனக் கச்சேரிகளில் மேலும் மெரூகூட்டுவதற்கும் பயன்படுகின்றன. இசையொலியின் பல நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும் இசையறிவில் வளர்ந்து தூய்பதற்கும் சிறப்பாக மொழி தனியிசையின் மேன்மையை உணர்வதற்கும் இவை பெரிதும் பயன்படுகின்றன.

பரதமுனி தனது நாட்டிய சாத்திரத்தில் இசைக்கருவியை அவை உருவாக்கும் வெவ்வேறு ஒலிகளின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றார். வகைப்படுத்தல் நான்கு வகையான கருவிகளை உள்ளடக்கியது. கம்பி வாத்தியங்கள் (டாடா) தாளவாத்தியங்கள் (அவனத்தா)) காற்று வாத்தியங்கள்(சுஷிரா) மற்றும் திடமான கருவிகள்( கானா)

இந்த வகையோடு இசைக்கருவிகளில் ஒலியை உருவாக்கும் பல்வேறு வழிகளை பிரதிபலிக்கிறது. நாட்டிய சாத்திரம் என்பது நாடகம், நடனம் மற்றும் இசையை உள்ளடக்கிய இசை நிகழ்ச்சிகள் பற்றிய ஒரு பண்டைய இந்தியாவில் ஆய்வுகளாக கூறப்படுகிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஜரோப்பிய காலத்தில் முத்தமிழ் என்று கூறப்படும் மூன்று தமிழ், இயல் இசை, நாடகம். இயலும் இசையும் சேர்ந்து நாடகம் உருவாகியது. இயல், இசை இரண்டும் உடலும் உயிரும் போன்றது. கலை இலைக்கியத் திறனாய்வு வரலாற்றில் இது அலங்கார சாஸ்திரம் எனப்படும். வட இந்தியாவில் இத்துறையை வளர்த்தெடுத்த முன்னோடிகள் முனிவர், தண்டி, ஆனந்தவர்த்தகை, அபிநவகுப்தர் முதலியோர். இவர்களில் முக்கியமாக குறிப்பிடத்தக்கவருள் ஓருவர் பரதமுனி ஆவார்.

பரதமுனி வடஇந்திய கலை இலக்கியத் திறனாய்வில் நான்கு கொள்கைகள் முக்கியமானவை. ரசம், தொனி, வக்றொக்கி, அலங்காரம் என்பன அவை. பரதமுனிவரின் நாட்டிய சாத்திரம் ரசக்கோட்பாடு பற்றி விரிவாகப் பேசுகிறது. ஒரு நாடகத்தை அல்லது நடனத்தை மேடையில் அரங்கேற்றுவதன் நோக்கமே பார்வையாளரிடம் ரச உணர்வை ஏற்படுத்துவதுதான் என்பது பரதரின் கருத்து. நாட்டிய சாத்திரம் எட்டு ரசங்கள் பற்றிப் பேசுகின்றது. சிரங்காரம், ஹஸ்யம், ரௌத்திரம்(கோபம்) காருண்யம்(கருணை) பீபஸ்த்தம்(இழிவு) பயாகைம்(பயம்) வீரம், அற்புதம்(வியப்பு) என்பவை அவை எனக் கூறப்படுகின்றது.

கவிதையை மையப்படுத்திய தனது  தொனிக்கோட்பாட்டுடன் நாடகம், நடனம் அகியவற்றை மையப்படுத்திய ரசக் கோட்பாட்டை இணைப்பதன்மூலம் ஆனந்தவர்த்தனர் ரசக் கோட்பாட்டை வரிவுபடுத்தியிருக்கிறார். இவ்விரு கொள்கைகளும் ஏற்றுக் கொள்வது முறையானவை அல்ல. தொனி ஒரு வெளிப்பாட்டு உக்திமுறை என்றால் ரசம் கவிதையில் இறுதி தாக்கத்தைக் குறிக்கின்றது எனலாம்.

செவ்வியல் இலக்கியக்காக பயன்படும் பண்பாடுகளில் கலைகள் காணப்படுகின்றன. அக்கால இலக்கியங்கள் பல்வேறு பார்வைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மனத்துள் தோன்றும் கற்பனைகள் ஒரு கட்டமைப்பை உருவாக்குகின்றன. இக்கட்டமைப்பு பிள்ளைக கலையாக உருவெடுக்கிறது. கலைஞர்களும் இசைக்கருவிகளும் இது குறுநில மன்னர்களைச் சொல்…

குன்றன்குறவல் பற்றி ஜங்குறுநூறு குறிப்பிடுகிறது. பாணர், பாடுநர், பரசிலர் ஆகியோர் பற்றிச் செய்திகள் உள்ளன. ஓர் இலக்கியத்தில் குருவிக் கூடுகளில் யாழ் நரம்பு காணப்பட்டது, என்னும் குறிப்பு வருகின்றது. யாழ்போன்ற இசைக்கருவிகள் அளவில் மலிந்திருந்தன என்பதையும் இசைக்கஞைர்களும் நிறைய இருந்தனர் என்பதையும் இந்தச் செய்யுள் வரிகள் உணர்த்தகின்றன. சமூகம் இசைக்குழுச் சமூகமாக இருந்தது எனலாம்.

இசை-இசைக்கலைஞர்-இசைக்கருவிகள் தினைச்சமூகம் பற்றிக் கூறும் கி.பி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் தொல்காப்பியத்தில் இசை நூல்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

அச்சமூகத்தில் கல்விமுறை இருந்தது. பறை, பான், யாழ்நுடி, தன்னுமை, குழல், முழவு ஆகிய  பல்வேறு  இசைக்ருவிகள் பற்றிச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. யாழ் மிக முதன்மையான  ஓர் இசைக்கருவியாக இருந்தது. சங்க பாடல்களில் அறுபத்தொன்பது இடங்களில் குறிக்கப்பெறும் ஓர் இசைக்கருவி யாழ், யாழை இசைத்தவன் பாணன், பானன், பாணன்மகள். யாழ்மகள், பாடினி ஆகிய பெயர்கள் பாணனைக் குறிக்கும் ஒரு பொருட் பண்மொழி பறையை இசைத்தவன் பறையன், துடி இசைத்தவன் துடையன் தன்னுமைக் கருவி உழவுச் சூழல் போர்ச் சூழல் ஆகிய சூழ்களில் இசைக்கப்பட்டது.

பாணனின் மனைவியாக விறவி பேசப்படுகிறாள். விறவி மற்றும் பாடினி இருவரும் ஆடல், பாடல்,கருவி இசைத்தல் ஆகிய மூன்றிலும் வல்லதாக இருந்தனர். கலைஞர்கள் ஒரு குழுவாக வாழ்ந்ததைச் சொல்கிறது. பொருநாற்றுப்படை யாழ் பற்றிய நீண்ட வர்ணனையைக் கூறும். குறிப்பிட்ட இசைக்கருவிகளை இசைத்தவர் இழிவாக மதிக்கப்பட்டனர். ஆடல் கலை கலைஞர் ஆடல் (ஆட்டம்) என்னும் கூற்று என்றும் நடனக் கலை குறிக்கப்பட்டது.

பயிர் விளைவது போலவும் வேட்டை ஆடுவதும் போலவும் நடனம் ஆடினர். ஆடலுக்கு தனியே அவையும் ‘ஆடுகளமும்’ இருந்தன. அவர்களும் ஆடியிருக்கின்றனர் என்னும் குறிப்பு உண்டு. மதிற்றுப்பத்து நூலின் ஆறாம்பத்து, ஆடுகோட்பாட்டு சேரலாதனைக் காக்கைப் பாடினியார். நச்சென்னையார் பாடியதாகும். ஆதி மந்தி-ஆட்டத்தி ஆகியோரின் ஆட்டமும் நாம் அறிந்ததே குரவை துணிங்கை ஆகிய ஆட்டம் ஆட்ட வகைகள் இருந்தன. குரவையாட்டம்  என்னும் குரவைக்கூத்து என்னும் கூறப்படுகின்ற இதே ஆட்டம் குழுவாக ஆடும் ஆட்டவையில் சேர்ந்தது. பல்வேறு ஓசைகள் பற்றிக் குறிப்பிடும் மதுரைக் காந்தி வெறியாடும் வேலன் முருகன் கடவுளை வழிபட்டு நிற்கும்போது குரவைக் கூத்து நிகழும் எனக் கூறப்படுகின்றது.

குரவைக் கூத்து நிகழும் என்று கூறுகின்றது. சேரிகள் தோறும் புனைற்துறைகள் பாட்டுக்கள். கூத்துக்கள் ஆகிய  மகிழ்ச்சி ஆரவாரங்கள் “மன்றுதொரும்  நின்ற குரவை பேரிசை நனீனன் பெறும்பெயர் நன்னாள் சேரி வழிவின் ஆர்ப்பு” என்பன பாடல் வரிகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

இறைவழிபாட்டு சமூகத்தில் கலையும், கலைதரும் இறைவழிபாட்டுச் சமூகத்தில் வேலன் வெறியாகுதல் என்னும் வெறியாட்டம் இருந்தது. தொடக்கத்தில் சடங்காக இருந்தது. இது பின்னர் ஆட்டமாக மாறியது. பரதன் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின்  தோற்றம் பெற்ற ஒரு நடன வகையாகும். பாவம், ராகம், தாளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த நடனம் இந்தியாவின் செவ்வியல் நடன வகைகள் ஒன்றாக கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் இது கூத்து, ஆடல், நாட்டியம், அதிராட்டம் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்ட போதும் கடந்த 70 அண்டுகளாக ‘பரத நாட்டியம்’ என வழங்கப்படுகின்றது.

அந்தவகை பரத நாட்டியம் தமிழர்கள் எங்கெல்லாம் பரந்து வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் கோலோட்சி வரும் ஒரு நடனக் கலையாக விளங்குகின்றது. அந்த வகையில் பரத நடனக் கலையானது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, போன்ற  ஆசிய நாடுகளிலும் மொரீசியஸ் போன்ற  ஆபிரிக்க நாடுகளிலும் அமெரிக்காக. அவுஸ்ரேலியா, ஜக்கிய இராச்சியம் போன்ற ஜரோப்பிய நாடுகளிலும் புலம்பெயர் தமிழர்களால் ஆடப்பட்டு வருகின்றது. இங்க பரத நாட்டியத்திற்கென்றே நடனப் பள்ளிகள் மற்றும் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

தமிழர்களின் கலைகளுள் கும்மி, கோலாட்டம். ஒயிலாட்டம் போன்ற நடனங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவையாகும். இவை புலம்பெயர் தேசங்களில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக திருவிழாக்களில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளில் இத்தகைய நடனங்கள் ஆடப்படுகின்றன.

தமிழகம் வளர்த்த ஆடற்கலை கூத்து தேவரடியாள் முறை, தாசி ஆட்டம், சதிர் எனப் பல்வேறு பெயர்கள் பெற்று தற்காலத்தில் பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் செவ்விய ஆடல்களில் ஒன்றாக போற்றப்படும் இந்நாட்டியக் கலையை உலகில் பல நாடுகளில் உள்ளோர் விரும்பி முறைப்படி பயின்று அரங்குகளில் வெளிப்படுத்துவது இதன் சிறப்பாகும்.

பரத நாட்டியத்தில் நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகிய மூவகை ஆடல்கள் உள்ளன. நிருத்தம் என்பது உடல் அசைவுகளை முதன்மை கொண்ட ஆடலாகும். 108 சரணங்களும் கூடிய தாண்டவம் நிருத்த வகையைச் சேர்ந்தது. நிருத்தியம் என்பது நடனமாகிய நிருத்தமும் அபிநயத்தால் வெளிப்படும் நாட்டியமும் கலந்து விளங்குவதாகும். பரத நாட்டியத்தில் ஆங்கிகம், வாசிகம், ஆகார்யம், சாத்துவிகம் ஆகிய நான்கு வகை அபிநயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நாட்டியத்திற்கு மிக இன்றியமையாதது இசையாகும். ஆடலில்லாத இசை இருக்கலாம். ஆனால் இசையில்லாத ஆடல் இல்லை. உருப்படிகளை நாட்டியத்திற்கு  நாட்டியம் அலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், கர்நாடக இசையின் அடிப்படையில் அமைந்தவை. நாட்டிய உருப்படிகளில் இவற்றுள் ஜாவளி எனும் நாட்டிய உருப்படிக்கரிய பாடல் தெலுங்கு மொழியிலேயே அமைந்துள்ளது.

சிலப்பதிகாரத்தில்  கோயில்களிலும் மாளிகைகளிலும் வாழ்ந்த நாட்டியக் கலை சபையோர் முன்னிலையில் அது ஒரு அரங்க கலையாகும். சின்னையா, பொன்னையா. சிவானந்த், வடிவேலு ஆகிய நாட்டிய சகோதரர் நால்வரும் மேடை நிகழ்ச்சிக்கு ஏற்ப உருப்படிகளைன அமைத்துக் கொண்டனர். மங்களச் சொற்களை கொண்ட கடவுள் வாழ்த்துப்பாடல் நாட்டிய நிகழ்ச்சியில் காணப்பட்டன.

நாட்டிய நிகழ்ச்சியில் மல்லாரி எனும் ஒரு நாட்டிய உருப்படி அலாரிப்புக்கு முன் ஆடப்பட்டு வருகின்றது. முற்காலத்தில் இராகம், நட்டுவனார் தாளம், மிருதங்க குழல் ஆகிய அனைத்து இசையும் சேர்ந்திருக்க நாட்டிய நடிகை நிருத்த வகையில் மல்லாவியை ஆடுவாள். இருவகை வர்ணங்களில் நாட்டியத்திற்குக்கென ஏற்படும் பதவர்ணம் விளப்பகானத்தில் பாடப்படுவதாலும் உருப்படி முழுவதிலும் சாத்தியம் அமைவதாலும் தாள வர்ணத்திலிருந்து வேறுபடுகிறது.

கி.பி 2 ஆம் நூற்றாண்டிலிருந்து உட்பட்ட காலத்தில் பரத நாட்டிய சாத்திரம் என்ற நூல் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர் இந்நூலை பரதமுனிவர் தமக்கு முன்பிருந்த நாட்டிய சாத்திர நூல்களிலிருந்து முழுமை செய்தார். சிவபெருமான், பிரம்மா முதலியவர்களின் பெயர் குறித்து பரதர் ஆகியோரின் நாட்டிய நூல்களுக்கு மூலமாக விளங்கியது.

சிவாவி, இருசார்வர் ஆகியோருக்கும் பரதருக்கு முன்பே நாட்டிய சாத்திர நூல்களைச் செய்தவர்கள் ஆவர். பரத முனிவருக்குப் பிறகும் பரத நாட்டிய சாத்திரங்கள் தோன்றின. கோஹளர, மதங்கள் அகியோரும் நாட்டிய சாத்திரங்களை இயற்றி உள்ளனர்.

மாதுருகுப்தர் எழுதிய  நாட்டிய சாத்திர நூலுக்கும் சிறந்த  உரைகள் தோன்றின. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றம் கதையில்  தமிழக ஆடல்,  நாடகம் தொடர்ந்து பல்வேறு விளக்கங்கள் காணப்படுகி;ன்றன. இலக்கிய வடிவங்களில் நாடகம் காணப்பட்டன

நாட்டிய சாத்திரம் என்பது பண்டைய இந்திய நாடகம், நடனம் மற்றும் இசை பற்றி விரிவாக கூறப்படுகின்றன. பரதமுனிவரால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் இசைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு;. நாட்டிய சாத்திரத்தில் இசை எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றது. நாட்டிய சாத்திரம், நாடகம் மற்றும் நடனக் கலைகளுக்கு அடிப்படையாக இசையை கருதுகிறது. இசை இல்லாமல் நாட்டியம் முழுமையாகாது. பாவம் (உணர்ச்சி) மற்றும் ராகம் (இசை) இரண்டும் இணைந்து தாளத்துடன் (ரிதம்) கூடிய நடனமும் பரத நாட்டியம் என நாட்டிய சாத்திரம் விளக்குகிறது.

ஸ்ருதி இது இசையின் மிகச்சிறிய அழகான நுண்ணிய சுருதியைக் குறிக்கிறது. நாட்டிய சாத்திரம் 22 ஸ்ருதிகளைப் பற்றி குறிப்பிடுகிறது. ஏழு ஸ்வரங்கள் இசையின் ஆதாரமாக நாட்டிய சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்திக் கருவிகள,; வீணை துளைக் கருவிகள், புல்லாங்குழல,; தாளக் கருவிகள், மிருதங்கம் இசைக்கும் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பு (ரசம்) நாட்டிய சாத்திரத்தில் இசைக்கும் உணர்வுகளுக்கும் (ரசங்கள்) இடையே உணர்வை வெளிப்படுத்தும் சக்தி உண்டு. நாட்டிய சாத்திரம் என்பது நடனம், நாடகம் மட்டுமல்லாமல் இந்திய இசையின் கோட்பாடுகள், நுணுக்கங்கள் ஆழமாக இது இந்திய பாரம்பரிய இசைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

அரங்கு வடிவங்கள் மேற்கத்திய  இசை, நடனம் ஆங்கு  எனப் பல கலைகள் ஆசியாவிற்குள் வந்தது. நாட்டியம் என்பதற்கு ‘நட்’ என்பதே ஸ்மஸ்கிருத மூலச் சொல்லாகும். பாரத்தின்  நாடகம், நடனத்தை ஒரு அங்கமாக கொண்டிருந்தது. “நாட்டியம்” பரதரின் நூல் விபரிக்கும் நாட்டியம் நாடக கருவில் அமைந்தள்ளது. ஒரு கதையைத் தழுவி நடிப்பது நாட்டியம். இதில் இயல், இசை, நாடகம் மூன்றும் இணைந்திருக்கின்றன. கீதம் (வாய்ப்பாட்டு) வாத்தியம் (கருவிஇசை) நிருத்தம்(நடனம்) மூன்றும் நாட்டியத்திற்கு உறுப்புக்களாகும்

‘நாட்டிய சாத்திரம்’ நாட்டியத்தின் பல்வேறு அங்கங்களாக விபரிக்கும் ஒரு கலைக் களஞ்சியமாக திகழ்கிறது. நிருத்தம் பரதர் காலத்து நாட்டியத்தில் ஆங்கில அபிநயத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

உசாத்துணை

அரங்கசாமி, பழனி(1989),  தமிழ் நாடகம், தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

பரமசிவம் முத்துசாமி, “மொரீசீயஸ்” தமிழ்மொழிப் பண்பாட்டு சமூகம்.

பாலசுப்பிரமணியன் ச.வெ.(1994), சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புக்கள், தமிழ் பல்கலைக்கழகம். தஞ்சாவூர்.

நடராசன், தி.அ.(1996), திறனாய்வுக்கலை, சென்னை நியூ செந்சரி புக்கவுஸ்.

பரக்கலை கோட்பாடு, டி.ஆர்.. பத்மா சுப்பிரமணியம் (2003

ஆசிரியர்

சா.கோகுலவதனி

பழைய சந்தை வீதி, சித்தாண்டி – 04, மட்டக்களப்பு

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*