முன்னுரை
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள்மீது பாடல்கள் எழுதி புகழ்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் எழுதிய திருப்புகழில் 16,000 இசைபாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் உள்ள சந்தக் கூறுகள் பற்றிய விரிவான விளக்கம் ஆய்வில் தரப்பட்டுள்ளது
சந்தக் கூறுகள்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் லயம், தத்துவம், கவித்துவம், பக்தி இந்நான்கும் ஒருங்கே அமையப்பெற்ற நிகரற்ற அவதார நூலாய் விளங்குகின்றது. தாளஸ்வ ரூபத்திற்கும் தாளதத்துவத்ததிற்கும் திருப்புகழ் ஓர் ஒப்பற்ற உதாரணமாகும். இத்தாளத்தில் அமைந்துள்ள சாகித்தியங்களும் அதனுடைய சந்தங்களும் ஒன்றாக இணையும்போது அப்பாடல்கள் பன்மையில் ஒருமையாகவும், ஒருமையில் பன்மையாகவும் இயற்கையில் விளங்கும் ஓர் விந்தையாக மிளிர்கின்றது.
சாதாரணமாக சங்கீதம் பயில்வோருக்குத் தாள நிர்ணயம் ஏற்படுத்திக் கொள்வது சற்று கடினமாகின்றது. வழக்கத்தின்படி வித்தியார்த்திகள் ஆரம்பத்தில் ஸ்வராவனி பயிற்சி, கீதம், ஸ்வரஜதி, வர்ணம் இவைகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற பின்னே கீர்த்தனைகளைப் பாடச் செய்ய ஆரம்பிக்கின்றார்கள் இவ்வாறு இருந்தும் சில மாணவர்களுக்குத் தாளநிர்ணயம் எளிதில் ஏற்படுவதில்லை. கற்பனை சக்தி, பக்தி, ஊக்கம், கவித்துவம் இவைகள் இருந்தும் இலயத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லாமல் தவிக்கின்றார்கள். அநுபவத்தில் கீதவர்ணஸ்வராவளிகளில் அதிககாலத்தைப் பயிற்சி செய்வதோடு திருப்புகழ் பாடல்களையும் மூன்று காலங்களில் பயிற்சி செய்தால் லய ஞானம் நிச்சியமாக ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
சுமக ஓரிக்கைகளினால் தாள வாத்தியங்களில் ஏற்படும் நுட்பபேதங்கள் தான பிரஸ்தார கணக்குகளைவிட அதிகமாகும். ஆகவேதனி ஆவர்த்தனங்களைப் பிரஸ்தாரம் செய்து கொண்டுபோகும்போது வாத்யகாரர்கள் ஒவ்வொருவரும் தனக்கேற்ற ஒரு தனிச் சக்தியை வெளிபடுத்தமுடியும். வாசிப்போரினுடைய மகிமை லய சமுத்திரத்தில் எவ்வாறு பிரகாசிக்கின்றது என்பது நன்கு விளங்கும்.
லய பிரஸ்தாரங்களைச் சரிவர வாசிப்பது சங்கீதபாஜை என்று கூறப்படுகின்றது. இச்சங்கீத பாஜையை அறிந்தவர்கள்தான் இதன் சுவையை அறியமுடியும் அந்தவகையிலே, திருப்புகழ் பாடல்கள் தாள நடைகளுக்கேற்ற சந்த பாடல்களாக மிளர்கின்றது. அதாவது தாளங்களில் காணப்படும் ஜாதிகளான திஸ்ரம் – 3. சதுஸ்ரம் – 4, கண்டம் -5. மிஸ்ரம் 07. சங்கீரணம் 09 என்ற அமைப்பின் அட்சரங்களுக்கேற்ப திருப்புகழ் பாடல்களில் சந்தக் கூறுகள் அமைந்துள்ளன.
திஸ்ரத்தில் 3 (1) தமருமமருமனையுமினிய
தனமுமரசம் – அயலாகத் எனத் தொடங்கும் பாடலில்
தனனதனனதனனதனன
தனனதனனதனதான
2. மங்கை சிறுவர் – எனத் தொடங்கும் பாடலில்
தந்ததனன
3. கள்ளமுள்ள – எனத் தொடங்கும் பாடலில்
தய்யதய்ய
சதுஸ்ரம் 4 (1) கைத்தல நிறை கனி எனத் தொடங்கும் பாடலில்
தத்தனதனதன
(2) கொந்ததார்மைக்கு – எனத் தொடங்கும் பாடலில்
தந்தானத்தனி
(3) பாலாய் நூலாய் – எனத் தொடங்கும் பாடலில்
தானாதானா
கண்டம் 5 (1) அறிவழிய மயில் பெருக – எனத் தொடங்கும் பாடலில்
தனதனனதனதனன
(2) எங்கேனு மொருவர்வர் எனத் தொடங்கும் பாடலில்
தந்தானதனதனன
(3) காரு மருவும் பெருகு – எனத் தொடங்கும் பாடலில்
தானதனதந்ததன
மிஸ்ரம் 7 (1) அகரமுமாகி அதிபனுமாகி எனத் தொடங்கும் பாடலில்
அதிகமுமாகி அகமாகி
தனதனதானதனதனதான
(2) இருட் குழலைக் குலைத்து முடித் எனத் தொடங்கும் பாடலில்
தனத்ததனத்தனத்ததனத்
(3) பொன்றலைப் பொய்க்கும் பிறப்பைத் எனத் தொடங்கும் பாடலில்
தந்தனத்தத்தந்தனத்தத்
பாடலில் இவ்வாறு 5 ஜாதிகளின் அடிப்படையில்
திஸ்ரத்தில் 65 சந்தங்கள் 11 வகைத்தாள அமைப்புக்களும்
சதுஸ்ரத்தில் 175 சந்தங்கள் 16 வகைத்தாள அமைப்புக்களும்
கண்டத்தில் 134 சந்தங்கள் 10 வகைத்தாள அமைப்புக்களும்
மிஸ்ரத்தில் 87 சந்தங்கள் 12 வகைத்தாள அமைப்புக்களும்
சங்கீரணத்தில் 48 சந்தங்கள் 17 வகைத்தாள அமைப்புக்களும்
மொத்தம் 509 சந்தங்கள் 66 வகைத் தாள அமைப்புக்களும் மொத்தம் கிடைக்கின்றன. இவைகள் 7 ×5=35 தாளங்களில் அடங்கி இருக்கின்றன.
மேலும் திருப்புகழ் பாடல்களில் கலப்பின் ஜாதி நடைகளை இணைத்த சந்த கூறுகளும் இடம்பெற்றுள்ளன. இவைகள் 11-13-15-17 அட்சரங்களைக் கொண்ட சந்தப் பாடல்களில் காணப்படுகின்றன. இவைகள் அடிப்படைச் சந்தக் கூறுகளை உள்ளடக்கியவைகளாகக் கொண்டு விளங்குகின்றன.
உதாரணமாக
11 அட்சரம் 3+3+5 சுருதி மறைக விருநாலு
தனனதனனதனதான
3+4+4 சீருலாவிய வோதிம்
தானதானனதானன
4+3+4 பொங்குங் கொடிய கூற்றனு
தந்தந்தனனதாத்தன
4+4+3 மனிதனை இலாத பாவி
தனதன்தனானதான
4+7 மின்னார் பயந்த மந்த
தன்னாதனந்தனந்த
13 அட்சரம் 3+4+6 கண்கயற் பினைமா னோடுற
தந்ததத்தனதானாதன
4+4+5 வாடையில் மதனை யழைத் துற்று
தானனதனதனதத்தத்த
4+5+4 அழுதழுதா சாரநேசமு
தானனதனதனதத்தத்த
5+3+5 கரைபடு ழுடம்பிரா தெனக்
தனதனதானானதானை
5+4+4 மாண்டா ரெலும் பணியஞ் சடை
தாந்தானதந்தனதந்தன
15 அட்சரம் 3+3+5+4 கரியமேக யெனுங் குடிலார் பிறை
தனனதானதனந்தனதானன
3+3+4+5 ஓடிஓடிஅழைத்துவரச்சில
தானதானதனத்ததனத்தன
3+4+5+3 காலமுகி லென நினைவு கொடு ருவிலி
தனதனதனதனதளதன
3+5+3+4 அழகுதவழ் குழல் விரித்துக் காட்டி
தனனதனதனதனத்தத்தாத்த
3+5+4+3 கங்குலின் குழற்கார் முகஞ்சரி
தந்ததந்தனத்தானதந்தன
4+3+3+5 முத்துமணி பணிகளா ரத்தாலு
தத்ததனதனனதானத்தான
4+3+3+5 நரை ஒருபற்க மூன்று தோல்வற்ற
தனதனதத்ததந்ததானத்த
4+4+3+4 கரியுரி அரவமணிந்த மேனியார்
தனதனதனைதனந்ததானை
4+3+4+4 இருகுழை யிடறிக்காது மோதுவ
தனதனதனைத்தானதானன
4+5+6 அந்தகன் வருந்தினம் பிறகிடச்
தந்தனதனந்தனந்தனதனத்
5+3+3+4 ஆராத காதலாகி மாதர்த்
தானானதானதானதானை
5+3+4+3 முத்துதமிழ்மாலைகோடிக்கோடி
தந்ததனதானதானத்தான
5+5+5 மிகுமேழுகடலைத்தேனை
தத்ததனதானதனதந்தான்
6+3+3+3 இடமருவுஞ்கீற்றவேலெடுத்து
தனதனனந்தாத்ததானதத்த
17 அட்சரம் 3+3+3+8 சீர்சிறக்குமேனிபசேல்பசேலென
தானதந்ததானதனாதனாதன
3+4+5+5 பனியின்விந்துளிபோலவேகருவினுரு
தனனதந்தனதானனாதனதனன
3+5+5+4ஸ்ர கலகசம்ப்ரமத்தாலேவிலோசன
தனனதந்தனதானனாதானான
4+4+4+5 ஸ்ரபாழ்பிணிஆற்றப்படாதுளம்
இதன்பின் மேலும் 21 – 30 அட்சரங்கள் கொண்ட சந்தக் கூறுகளும் பாடல்களில் காணப்படுகின்றன. (தென்னிந்திய மரபு இசையியல், 2012, டி497-499)
இவ்வாறு அடிப்படைச் சந்தக் கூறுகளை உள்ளடக்கிய கலப்பின சந்தப் பாடல்களில் 214 சந்தங்களும் அதில் 44 தாள அமைப்புகளும் உள்ளன. இப்பாடல்களின் போக்கு மூன்று முறை ஒரே சீராக மடங்கித் தொங்களில் முடியும் பாடல்களாக உள்ளன. மேலும் அடிப்படைச் சந்தம் இல்லாமல் ஒலி அமைப்பு, சீர் அமைப்பு, அளவுகளில் மாறுபாடுக் கொண்டு தொங்கலில் முடியும் பாடல்களும் உள்ளன. அவற்றில் 134 சந்த வேறுபாடுகளும் தாள அமைப்புக்களும் உள்ளன. இத்தாளங்கள் எந்த தாள அமைப்பிலும் உட்படாமல் விளங்குவதால் இவைகள் திருப்புகழ் தாளங்கள் என வழங்கப்படுகின்றது. இவை அங்கப் பிரமாண தாளம் என்றும் கூறப்படுகின்றன.
இவ்வகையில் 1250 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்களும் 178 தாள அமைப்புக்களும் அடங்கியிருக்கின்றன. இவை 35 தாளங்களிலும் 108 தாளங்களிலும் அந்திய 52 தாளங்களிலும், சில அங்கப் பிரமான தாளங்களிலும் பாடப்பட்டு வருகின்றன.
எனவே திருப்புகழ் பாடலில் அமைந்துள்ள சந்த அமைப்புகள் தாளப் போக்கிற்கு ஏற்ப அமைந்துள்ள நிலையைக் கீழே காணலாம்.
ரூபகதாள போக்கிற்கு ஏற்ப 6-12 அட்சர சந்தங்களும்
ஆதிதாள போக்கிற்கு ஏற்ப 8-16 அட்சர சந்தங்களும்
ஜம்பைத்தாள போக்கிற்கு ஏற்ப 10-20 அட்சர சந்தங்களும்
மிஸ்ரசாபுதாள போக்கிற்கு ஏற்ப 7-14 அட்சர சந்தங்களும்
சங்கீர்ணசாபுதாள போக்கிற்கு ஏற்ப 9.18 அட்சர சந்தங்களும் அமைந்துள்ளதனைக் காணமுடிகின்றது.
இசைக்கு ஸ ரி க ம ப த நி என்ற ஏழு எஸ்வரங்கள் எவ்வாறு ஆதார எஸ்வரங்களாக விளங்குகிறதோ அதைப்போல, தாளத்திலும் த-திதொம்நம் ட-ணங்தின் என்ற சொற்களும் தாளத்திற்கு ஆதாரச் சொற்களாக விளங்குகின்றன. இந்தத் தாளச் சொற்களில் “த நம்” என்ற சொற்களை வல்லினம், மெல்லினம் குறில் நெடில் ஆகியவற்றின் பேதங்களுடன் “ய” என்ற இடையின எழுத்தையும் சேர்த்து சோடஷாங்க முறையில் அதாவது பிரஸ்தார முறையில் விரிவாக்கம் செய்யும்போது பல ஆயிரக்கணக்கான தாளச் சொற்களின் கூட்டமைப்புக்கள் கிடைக்கும். இதற்குத் தாளக் குழிப்பு என்று பெயர்.
இவ்வாறு திருப்புகழ் பாடல்கள் முழுமையாகச் சந்தங்கள் நிறைந்து பல்வேறு தாள நடைகளுக்கும் கற்பனை வளத்துக்கும் ஏற்ப அமைந்திருப்பது வேறு எந்தப் பாடல்களிலும் காணப்படாத ஒரு அறிய படைப்பாகவே விளங்குகிறது. எனவே, பாடல்களையே சந்தக் கூறுகள் அடங்கிய தாளங்களாக அமைந்துள்ளச் சிறப்பு அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடலையேச் சாறும்
உசாத் துணை நூல்கள்
1. ஜெயந்தி சங்கர் இசையும் வாழ்க்கையும் – சந்தியா பதிப்பகம்- சென்னை 2007.
2. எஸ்.கே.சிவபாலன் – இசைத்தமிழ் கட்டுரைகள் – முதல்பதிப்பு- சென்னை 2003.
3. வீ.ப. காசுந்தரம் – தமிழிசையில் – தமிழ் பல்கலைக் கழக வெளியீடு – முதற்பதிப்பு, தஞ்சாவூர் – 1994.
4. 35 தாளங்களில் தனியாவர்த்தனம்- நல்லை கண்ணதாஸ் – முதல் பதிப்பு 2016.
5. கோர்வை களஞ்சியம் – இசைமணி ம தீபதயாளன் – முதற்பதிப்பு- 2022.
அ. கல்யான்சரன், முனைவர்பட்டஆய்வாளர்,
கிழக்கு பல்கலைக்கழகம், நாவற்குடா, மட்டக்களப்பு.
Leave a Reply